போர்நிறுத்த ஒப்பந்தத்தை மறுப்பதன் மூலம் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், அவருடைய சொந்த நாட்டையே அழித்து வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.
போரின் காரணமாக ரஷ்யாவின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டு பணவீக்கம் அதிகரித்திருப்பதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
போர்நிறுத்த ஒப்பந்தத்தை மறுப்பது ரஷ்யாவை அழிவுப்பாதைக்கே இட்டுச்செல்லும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, சமாதான ஒப்பந்தத்தில் ஆர்வம் காட்டி வருவதாக ட்ரம்ப் கூறியுள்ளார்.