யாழ்ப்பாணத்தில் (Jaffna) சுயேட்சையாக போட்டியிடும் வேட்பாளர் ஒருவரின் வீட்டினுள் வன்முறைக் கும்பல் ஒன்று அத்துமீறி உள்நுழைந்து நடாத்திய தாக்குதலில் அவரின் தந்தை காயமடைந்துள்ளார்.
குறித்த தாக்குதல் சம்பவம் நேற்றையதினம் (12.11.2024) மாலை கொழும்புத்துறை - நெளுக்குளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
புவனேஸ்வரன் வசந்தராஜ் என்பவரின் வீட்டின் மீதே குறித்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், கொழும்புத்துறை - நெளுக்குளம் பகுதியில் அமைந்துள்ள ஜனநாயக தமிழரசு கூட்டமைப்பு சுயேட்சை குழு 14 இன் வேட்பாளர் புவனேஸ்வரன் வசந்தராஜின் வீட்டிற்குள் வன்முறைக் கும்பல் ஒன்று அத்துமீறி உள்நுழைந்துள்ளது.
இதனையடுத்து, வேட்பாளரின் தந்தையாரின் தலையில் இரும்பு கம்பியால் தாக்கிய கும்பலை சேர்ந்தோர் வீட்டின் ஜன்னல் கண்ணாடி மற்றும் மோட்டார் வாகனத்தின் மீதும் தாக்குதல் நடாத்தியுள்ளனர்.
மேலும், அயல் வீட்டின் மீதும் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதோடு குறித்த வீட்டில் வசிக்கும் இளைஞனின் மீதும் வாள் வெட்டு தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.
மேலும், அயல் வீட்டின் மீதும் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதோடு குறித்த வீட்டில் வசிக்கும் இளைஞனின் மீதும் வாள் வெட்டு தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்த விசேட அதிரடிப் படையினர் மற்றும் யாழ்ப்பாணப் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.