மாவை சேனாதிராஜா காலமானார்!

user 30-Jan-2025 இலங்கை 199 Views

இலங்கைத் தமிழரசுக்கட்சியின் சிரேஷ்ட தலைவரும் முன்னாள் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா நேற்று இரவு தனது 82 ஆவது வயதில் வயதில் காலமானார்.

இந்நிலையில், மூத்த அரசியல்வாதியான மாவை சேனாதிராஜாவின் மறைவுக்கு அரசியல்வாதிகள், பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மாவை சேனாதிராஜா தனது 82 ஆவது வயதில் உடல் நலக்குறைவால் யாழ். போதனைா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று  (29) இரவு 10. மணி அளவில் உயிரிழந்துள்ளார்.

இவர் வீட்டில் வழுக்கி விழுததை அடுத்து நேற்று முன் தினம்  காலை (28) தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில்  தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது அவர் காலமாகியுள்ளார்.

மேலதிக சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்ட நிலையில் CT scan பரிசோதனையில் வைத்திய நிபுணர்கள் தலையில் கணிசமான அளவில் இரத்தப் பெருக்கு இருப்பதை கண்டறிந்தனர்.

இந்நிலையில் அவருக்கு மூளையில் ஏற்பட்ட இரத்த கசிவு காரணமாக ஆபத்தான நிலையில் செயற்கை சுவாச உதவியுடன் சிகிச்சையில் அவர் சற்று நேரத்துக்கு முன் உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளது.

இவ்வாறான நிலையில் தமிழ் தேசியகட்சிகள் மாவை சேனாதிராஜாவை காண மருத்துவமனைக்கு படையெடுத்ததாக கூறப்படுகின்றது.

அன்னாரின் இறுதி கிரியைகள் தொடர்பில் பின்னர் அறிவிக்கப்படும் என குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.

Related Post

பிரபலமான செய்தி