பிள்ளையானுக்கு அதிர்ச்சி கொடுக்கும் அநுர அரசாங்கம்..

user 26-Jun-2025 இலங்கை 221 Views

கிழக்கு மாகாணத்தில் பொலிஸ் அதிகாரி மற்றும் 2 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில், முன்னாள் ராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் ( பிள்ளையான்) மீது குற்றப் புலனாய்வு திணைக்களம் விசாரணையை ஆரம்பித்துள்ளது.

இந்த கொலைகள் 2005 மற்றும் 2007 ஆம் ஆண்டுக்கு இடையில் நடந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அந்த நேரத்தில் கிழக்கு மாகாணத்தில் உள்ள ஒரு பொலிஸ் நிலையத்தில் பணியில் இருந்த ஒரு பொலிஸ் அதிகாரியை சுட்டுக் கொன்றதாக பிள்ளையான் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

மேலும் கிழக்கு மாகாணத்தில் ஒரு பணக்கார தொழிலதிபரையும், பிள்ளையானின் சொந்த அரசியல் கட்சி உறுப்பினரையும் கொன்றதாகவும் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

 

இந்த கொலைகள் தொடர்பாக எதிர்வரும் நாட்களில் பிள்ளையான் விசாரிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

ஏற்கனவே பல்கலைக்கழக துணைவேந்தர் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான குற்றச்சாட்டில் பிள்ளையான் சிறையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Post

பிரபலமான செய்தி