முதன்முதலாக இறந்த 4 இஸ்ரேலியப் பணயக்கைதிகளின் உடல்கள் ஹமாஸால் இஸ்ரேலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
உடல்கள் இஸ்ரேலின் டெல் அவிவ் நகரை வந்தடைந்த பின்னர் ஆயிரக்கணக்கானோர் கூடி அஞ்சலி செலுத்தினர்.
பணயக்கைதிகளின் இறப்பிற்கு ஹமாஸை கண்டித்துள்ள இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, இது ஒரு தாங்க முடியாத துக்கம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2023ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் இஸ்ரேல் மீது தாக்குதல் நடாத்திய ஹமாஸ், 251 பணயக்கைதிகளை காசாவிற்கு அழைத்துச் சென்றது.
இதற்கு பதிலடியாக இஸ்ரேல் ஒன்றரை வருடங்களாக நடாத்திய தாக்குதலில் 48,000 பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர்.
இதனையடுத்து, போர்நிறுத்த ஒப்பந்தத்தின் கீழ் பணயக்கைதிகள் பரிமாற்றங்கள் தொடங்கப்பட்டன.
காஸாவில் இன்னும் 66 பணயக்கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில், பாதி பேர் உயிருடன் இருப்பதாக கருதப்படுகின்றது.