கிழக்கில் இயங்கும் தீவிரவாதக் குழு !

user 04-Mar-2025 இலங்கை 272 Views

கிழக்கு மாகாணத்தின் கல்முனைப் பகுதியில் இயங்கும் ஒரு தீவிரவாத அமைப்பு குறித்து புலனாய்வுத் தகவல்கள் கிடைத்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

இன்று (04) நடைபெற்ற வாராந்த அமைச்சரவை செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர், பாதுகாப்புப் படையினர் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகக் கூறினார்.

கிழக்கு மாகாணத்தை தளமாகக் கொண்ட அத்தகைய குழு பற்றிய தகவல்கள் உள்ளன.

மேலும் உளவுத்துறை மற்றும் பாதுகாப்புப் படைகள் அது தொடர்பான விவரங்களை வெளியிட்டு வருகின்றன என்று குறிப்பிட்டார்.

பாதுகாப்பு செலவின தலைப்பு தொடர்பான விவாதங்களின் போது ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவும் இந்த விடயத்தை உரையாற்றியதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

இருப்பினும், பாதுகாப்புப் படையினர் தற்போது விழிப்புடன் இருப்பதாகவும், நிலைமையை தீவிரமாக மதிப்பிட்டு வருவதாகவும் அமைச்சர் ஜெயதிஸ்ஸ வலியுறுத்தியுள்ளார்.

Related Post

பிரபலமான செய்தி