மலையக மக்களுக்காய் கைகோர்போம்!

user 24-Feb-2025 இலங்கை 106 Views

200வருட மலையகத்தின் வரலாற்றை கொண்ட தமிழ் மக்களாகிய நாம் ஏனைய சமுகங்களுடன் ஒப்பிடுகின்ற போது பலவருடங்கலாக பின்னோக்கியிருக்கின்றோம் என பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்துள்ளார்.

மலையகத்தில் உள்ள அனைத்து அரசியலில் பிரதநிதிகளுக்கும் நாம் அழைப்பு விடுகிறோம் எனவும் அவர் கூறியுள்ளார்.

சிற்ப மற்றும் ஒவிய கலைஞர்களின் ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்த கலைஞர்களின் நிகழ்வில் உரையாற்றுகையிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.

அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

“நாம் எமது பிரச்சினைகளை எவ்வாறு சீர் செய்வது. கடந்த கால ஆட்சியாளர்களை கூறை குறி கொண்டிருக்க முடியாது.

மலையகத்தில் உள்ள அனைத்து அரசியலில் பிரதநிதிகளுக்கும் நாம் அழைப்பு விடுகிறோம். எமது சமுகத்தின் வளர்ச்சிக்கு அனைவரும் ஒன்றுபட்டு செயற்பட வேண்டும்.

தேசிய மக்கள் சக்தி அரசு மக்களின் அரசு. இது உழைக்கும் மக்களின் அரசு. ஆகவே உழைக்கும் மக்களின் குறைகளை கண்டறிந்துள்ளது வெகுவிரைவில் மக்களின் பிரச்சினைகள் கட்டகட்டமாக தீர்க்கப்படும்” என்றார்.

Related Post

பிரபலமான செய்தி