சம்மாந்துறையில் கசிப்பு உற்பத்தி பொருட்கள் கண்டுபிடிப்பு....

user 21-May-2025 இலங்கை 105 Views

ஒரு தொகுதி கசிப்பு உற்பத்தி பொருட்கள் சம்மாந்துறை பொலிஸ் நிலைய ஊழல் ஒழிப்பு பிரிவினரினால் மீட்கப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மல்வத்தை பகுதியில் உள்ள வயல்வெளியில் நீண்ட காலமாக இயங்கி வந்த கசிப்பு உற்பத்தி நிலையமே இவ்வாறு முற்றுகை இடப்பட்டு மீட்கப்பட்டுள்ளது.

தகவல் ஒன்றினை அடுத்து சம்மாந்துறை பொலிஸ் ஊழல் ஒழிப்பு பிரிவினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது மல்வத்தை பகுதி ஆற்றங்கரை அருகில் மண்ணில் புதைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கசிப்பு உற்பத்தி பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதேவேளை பொருட்களை மீட்ட பொலிஸ் ஊழல் ஒழிப்பு பிரிவினர் சந்தேக நபர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் மீட்கப்பட்ட பொருட்களில் 2 பரள் கோடா, பழ வகைகள் , கொள்கலன்கள் என்பன உள்ளடங்குவதுடன் பொருட்கள் யாவும் சம்மாந்துறை பொலிஸ் நிலையத்திற்கு சட்ட நடவடிக்கைக்காக எடுத்துச் செல்லப்பட்டன.

அத்துடன் கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே. இப்னு அசாரின் வழிகாட்டலில் சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எஸ் ஜெயலத் நெறிப்படுத்தலில் சம்மாந்துறை பொலிஸ் நிலைய ஊழல் ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரி தலைமையிலான குழு குறித்த நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Post

பிரபலமான செய்தி