ஸ்பேஸ் எக்ஸ் ரொக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்ட இஸ்ரோ செயற்கைக்கோள்!

user 19-Nov-2024 சர்வதேசம் 834 Views

ஸ்பேஸ் எக்ஸ் (Space x) நிறுவனத்திற்கு சொந்தமான ரொக்கெட் மூலம் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் இஸ்ரோ செயற்கைக்கோளை விண்ணில் ஏவியுள்ளது.

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பால்கன் 9 ரொக்கெட் மூலம் இஸ்ரோவின் தகவல் தொடர்பு செயற்கைக்கோள் ஜிசாட் - என்2 வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டுள்ளது.

இஸ்ரோவுக்கும் (ISRO), ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திற்கும் இடையே வர்த்தக ரீதியில் செயற்கைக்கோள் ஏவப்படுவது இதுவே முதல்முறையாகும்.

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ ஆண்டுதோறும் பல செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவி வருகிறது. ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து ரொக்கெட்டுகள் மூலம் செயற்கைக்கோள்கள் விண்ணில் ஏவப்பட்டு வந்தன.

அதேவேளை, தனியார் நிறுவனங்களின் ராக்கெட்டுகள் மூலமும் செயற்கைக்கோள்கை ஏவும் முயற்சியில் இஸ்ரோ இறங்கியுள்ளது.

விண்வெளி அறிவியலில் பல முன்னேற்றங்களைக் கண்டு, உலகின் தவிர்க்க முடியாத சக்தியாக உருவெடுத்துள்ள இஸ்ரோ, எலான் மஸ்கின் (Elon Musk)  ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் உதவியுடன் செயற்கைக்கோளை விண்ணில் ஏவுவதற்கு ஜி சாட் 20 செயற்கைக்கோளின் எடையே காரணம் என கூறப்பட்டுள்ளது.

 

 

 

 

 

Related Post

பிரபலமான செய்தி