தாயை கொடூரமாக கொலை செய்த மகள்..

user 04-Aug-2025 இலங்கை 89 Views

 குருணாகலில் வாரியபொல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ரந்தெனிய பகுதியில் தனது தாயை , மகள் கழுத்து நெரித்து கொடூரமாக கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த கொலை சம்பவம் நேற்று (03) இடம்பெற்றுள்ளதாக தெரிவித்த வாரியபொல பொலிஸார் மகளை கைது செய்துள்ளனர்.

ரந்தெனிய பகுதியைச் சேர்ந்த 74 வயதுடைய தாயொருவரே கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொலை சம்பவம் தொடர்பில் தாயின் 32 வயதுடைய மகள் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரான மகள் மனநல நோயால் பாதிக்கப்பட்டவர் என்பது பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மகளே தாயை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாரியபொல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Post

பிரபலமான செய்தி