முல்லைத்தீவில் ஜனாதிபதி தலைமையில் உலக தெங்கு தின கொண்டாட்டம்

user 02-Sep-2025 இலங்கை 81 Views

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பில் நாடே சுபிட்சமாக்கும் விருட்சம் கற்பகத்தரு வளம் உலக தெங்கு தின கொண்டாட்டம் 2025 நிகழ்வு ஜனாதிபதி அனுர குமார தலைமையில் ஆரம்பமாகியுள்ளது.

2025 ஆம் ஆண்டு வடமாகாணத்தில் 16,000 ஏக்கரில் தென்னைப் பயிர்ச் செய்கையை மேற்கொள்ளும் நோக்கில் இத்திட்டம் ஆரம்பிக்கப்படுவதோடு, 2027 ஆம் ஆண்டளவில் இந்த எண்ணிக்கை 50,000 ஏக்கராக அதிகரிக்கப்படவுள்ளது.

அதன்படி வடக்கில் முதலாவது விதை தேங்காய் உற்பத்தி அலகு ஜனாதிபதியின் தலைமையில் பளை நகரில் ஆரம்பித்துவைக்கப்படவுள்ளதோடு, புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரிக்கு எதிரே உள்ள பகுதியில் தென்னை அபிவிருத்தி சபையால் நடத்தப்படும் தெங்கு தொடர்பான கண்காட்சியையும் ஜனாதிபதி திறந்து வைக்கவுள்ளார்.

அதுமட்டுமல்லாது , முல்லைத்தீவு மாவட்டத்தில் வட்டுவாகல் பாலத்தின் நிர்மாணப் பணிகளும் இன்று (02) ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் ஆரம்பிக்கப்படவுள்ளது.  

 

Related Post

பிரபலமான செய்தி