2025 சாம்பியன்ஸ் டிராபி !

user 28-Feb-2025 விளையாட்டு 80 Views

ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் வியாழன் (27) அன்று மழை காரணமாக குழு ஏ இன் இறுதி ஆட்டம் நிறுத்தப்பட்டதை அடுத்து, பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணிகள் 2025 சாம்பியன்ஸ் டிராபி போட்டிகளை வெற்றியின்றி முடித்துள்ளன.

நேற்றைய போட்டி அறிவிப்பின் பின்னர், இரு அணிகளும் தலா ஒவ்வொரு புள்ளிகளை பெற்றன.

குழு ஏ இல் இந்தியா மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகள் அரையிறுதி இடங்களைப் பெற்ற பின்னர், போட்டியை நடத்தும், நடப்பு சாம்பியனான பாகிஸ்தானுடன் இணைந்து பங்களாதேஷும் 2025 சாம்பியன்ஸ் டிராபியில் இருந்து வெளியேறினர்.

இந்த மழையால் பாதிக்கப்பட்ட இந்த ஆட்டம் தென்னாப்பிரிக்கா-அவுஸ்திரேலியா இடையலான குழு பி மோதலைத் தொடர்ந்து ராவல்பிண்டியில் கைவிடப்பட்ட இரண்டாவது போட்டியாக அமைந்துள்ளது.

ராவல்பிண்டியில் புதன்கிழமை இரவு முதல் தொடர்ந்து மழைத் தூறல் பெய்து வருவதால், வியாழன் ஆட்டமும் மழையால் பாதிக்கப்படும் என்ற கவலையை ஏற்படுத்தியது.

வியாழன் பிற்பகல் 2:30 க்கு (IST) தொடங்கவிருந்த பாகிஸ்தான் -பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான போட்டி தொடர்ச்சியான மழையால் நாணய சுழற்சிக் கூட மேற்கொள்ளப்படாது தாமதமானது.

மாலை 4:00 மணிக்கு (IST), மழையானது ஆட்டத்தின் நம்பிக்கையையும் முடிவுக்குக் கொண்டு வந்தது,

மேலும் ஒரு பந்து கூட வீசப்படாமல் போட்டி அதிகாரப்பூர்வமாக கைவிடப்பட்டது.

இரு அணிகளும் ஒரு புள்ளியைப் பகிர்ந்து கொண்டன.

2025 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபியை சிறப்பாக முடிக்க வேண்டும் என்ற நம்பிக்கையில் பாகிஸ்தானும் பங்களாதேஷும் வியாழன் ஆட்டத்தில் நுழைந்தன.

இரு அணிகளும் ஏற்கனவே நியூசிலாந்து மற்றும் இந்தியாவிடம் தோல்விகளை சந்தித்துள்ளன,

அங்கு அணியின் அனைத்து துறைகளில் அவர்களின் செயல்பாடுகள் குறைந்துவிட்டன, இருப்பினும் பங்களாதேஷின் பந்துவீச்சு தாக்குதல் பாகிஸ்தானை விட சிறந்த நிலையில் இருந்தது.

2023 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற ஆடவர் ஒருநாள் உலகக் கிண்ணம் மற்றும் 2024 ஆம் ஆண்டு அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெற்ற ஆடவர் டி20 உலகக் கிண்ணத்தை தொடர்ந்து, ஐசிசி போட்டியில் இருந்து இந்த அணிகள் முன்கூட்டியே வெளியேறியது.

பாகிஸ்தான் தொடர்ந்து மூன்றாவது முறையாக முன்கூட்டியே வெளியேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

2025 சாம்பியன்ஸ் டிராபிக்கு, குழு A இல் ஒரு போட்டி மீதமுள்ளது.

குழு தலைவர்களை தீர்மானிக்க ஒரு போட்டியில் இந்தியாவும் நியூசிலாந்தும் விளையாடும்.

இந்த ஆட்டம் துபாய் சர்வதேச மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (02) நடைபெறும்.

Related Post

பிரபலமான செய்தி