ஐபிஎல் 2025 - ஏஐ நடத்திய ஏலத்தில் வெளியான தகவல்..!

user 20-Nov-2024 விளையாட்டு 89 Views

ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனுக்கான மெகா ஏலம் நடைபெறவுள்ள நிலையில், பாகிஸ்தான் வீரர்கள் ஐபிஎல் மெகா ஏலத்தில் பங்கேற்றால் எத்தனை கோடிக்கு செல்வார்கள் என ஏ ஐ தொழில்நுட்பம் கணித்திருக்கிறது.

ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனுக்கான மெகா ஏலம் வரும் 24 மற்றும் 25 ஆம் திகதியில் சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டா நகரில் நடைபெறுகிறது.

இந்த ஏலத்தில் 574 வீரர்கள் பங்கேற்கிறார்கள், இதில் இந்தியாவைச் சேர்ந்த 366 வீரர்களும், வெளிநாட்டைச் சேர்ந்த 208 வீரர்களும் பங்கேற்கிறார்கள்.இதில் மொத்தம் 204 இடங்களுக்கான ஏலம் நடைபெறுகிறது.இதில் 70 வீரர்கள் வெளிநாட்டு சேர்ந்தவர்களாக இருப்பார்கள்.

இந்த சூழலில் ஐபிஎல் போட்டியில் பாகிஸ்தானை சேர்ந்த வீரர்கள் கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் சேர்க்கப்படுவதில்லை.

2008 மும்பை குண்டுவெடிப்புக்கு பிறகு பாகிஸ்தான் வீரர்களுக்கு ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது.

இந்த நிலையில் பாகிஸ்தான் வீரர்கள் இல்லாமல் ஐபிஎல் தொடர் இவ்வளவு நாட்களாக நடைபெற்று வருகிறது. ஆனால் ஒரு காலத்தில் சோயிப் அக்தர், ஷாகின் அப்ரிடி போன்ற பாகிஸ்தான் அணியின் ஸ்டார் வீரர்கள் ஐபிஎல் தொடரில் இடம் பெற்றனர்.

பாகிஸ்தான் வீரர்கள் ஐபிஎல் தொடரில் பங்கு பெற்றால் அது பரபரப்பாக செல்லும். இந்த நிலையில் பாகிஸ்தான் வீரர்கள் ஐபிஎல் மெகா ஏலத்தில் பங்கேற்றால் எத்தனை கோடிக்கு செல்வார்கள் என ஏ ஐ தொழில்நுட்பம் கணித்திருக்கிறது.

அந்த வகையில் சர்வதேச ரி20 கிரிக்கெட்டில் அதிக ஓட்டங்களை பெற்றவர் பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்திருக்கும் பாபர் அசாம், ஐபிஎல் ஏலத்தில் பங்கு பெற்றால் 12 கோடி ரூபாய் வரை செல்வார் என ஏ ஐ கணித்திருக்கிறது.

பாபர் அசாமின் ஸ்ட்ரைக் ரேட் மிகவும் குறைவாக இருந்தாலும் அவர் நல்ல தொடக்க வீரராகவோ, நம்பர் மூன்றாவது வீரராகவோ ஒவ்வொரு அணிக்கும் இருந்திருப்பார்.

இதேபோன்று பாகிஸ்தான் வீரர்களிலேயே அதிகபட்சமாக வேகப் பந்துவீச்சாளர் ஷாகின் அப்ரிடி 15 கோடி ரூபாய்க்கு ஏலம் செல்வார் என்று கணிக்கப்பட்டிருக்கிறது.

இதேபோன்று பாகிஸ்தான் அணியின் தற்போதைய அணித்தலைவர் முகமது ரிஸ்வான் 10 கோடி ரூபாய்க்கும் சகலதுறை ஆட்டக்காரர் சதாப்கான் எட்டு கோடி ரூபாய்க்கும் ஏலத்தில் செல்வார்கள் என ஏ ஐ கணித்திருக்கிறது.

பாகிஸ்தான் வேக பந்துவீச்சாளரான ஹரிஷ் ரவுப் 10 கோடி ரூபாய்க்கும், பக்கர் சமான் 6 கோடி ரூபாய்க்கும் இமாமுல் ஹக் 3 கோடி ரூபாய்க்கும் ஏலத்தில் செல்வார்கள் என்று ஏ ஐ கணித்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

 

 

 

Related Post

பிரபலமான செய்தி