கொல்கத்தா நைட் ரைடர்ஸ்(KKR) அணியின் அணித்தலைவர் மற்றும் துணை தலைவர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதன்படி அணித்தலைவராக ரஹானே கொல்கத்தா மற்றும் துணைத்தலைவராக வெங்கடேஷ் ஐயர்(Venkatesh Iyer) நியமிக்கப்பட்டுள்ளனர்.
10 அணிகள் கலந்து கொள்ள உள்ள 18ஈவது ஐ.பி.எல். தொடர் வரும் 22ஆம் திகதி கொல்கத்தாவில் ஆரம்பமாகவுள்ளது.
இந்த தொடரின் முதல் போட்டியில் நடப்பு செம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவை எதிர்கொள்கிறது.
இந்த தொடருக்காக அனைத்து அணிகளும் தற்போது இருந்தே தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.
இந்த தொடரில் கலந்து கொள்ளும் 10 அணிகளில் டெல்லி மற்றும் கொல்கத்தாவை தவிர மற்ற அணி நிர்வாகங்கள் தங்களது அணித்தலைவர்களை ஏற்கனவே அறிவித்திருந்தன.
ஐ.பி.எல். தொடங்க இன்னும் 19 நாட்களே உள்ள நிலையில் டெல்லி மற்றும் கொல்கத்தாவின் அணித்தலைவராகக யார் நியமிக்கப்படுவார்கள்? என்ற கேள்வி ரசிகர்களிடையே எழும்பியது.
கொல்கத்தா அணியின் தலைவராக அஜிங்யா ரகானே அல்லது இளம் வீரர் வெங்கடேஷ் ஐயர் ஆகிய இருவரில் ஒருவர் நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டது.
இந்நிலையில், கொல்கத்தா அணியின் தலைவராக அஜிங்யா ரகானேவை நியமித்து ள்ளதாக கொல்கத்தா நிர்வாகம் இன்று அறிவித்துள்ளது. மேலும், கொல்கத்தா அணியின் துணை அணித்தலைவராக வெங்கடேஷ் ஐயர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான அறிவிப்பை கொல்கத்தா அணியின் சி.இ.ஓ வெங்கி மைசூர் வெளியிட்டுள்ளார்.
இதேவேளை, கொல்கத்தா அணி தங்களது அணியின் புதிய ஜெர்ஸியை வெளியிட்டுள்ளது.
‘நடப்பு செம்பியன்’ என்பதை குறிக்கும் விதமாக ஐபிஎல் 2025 தொடரில் தங்க நிற பேட்ஜ் அணிந்து கொல்கத்தா அணி விளையாட உள்ளது . பிற அணிகள் அனைத்தும் வழக்கம்போல் வெள்ளை நிற ஐபிஎல் பேட்ஜுடன் விளையாடும்.
எதிர்வரும் ஐபிஎல் தொடரில் இருந்து இந்த நடைமுறையை பிசிசிஐ அறிமுகம் செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.