அநுர அமைச்சர்களுடன் வாதிடுவது முட்டாள்தனமானது !

user 10-Mar-2025 இலங்கை 51 Views

ஆளும் தரப்பிடம் முக்கிய விடயமொன்றினை பற்றி விசாரணை செய்து தெளிவுபடுத்துமாறு கேரிக்கை விடுத்திருந்ததாகவும், எனினும், பாதுகாப்பு அமைச்சர் பதில் வழங்காது சென்றுவிட்டதாகவும், நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் குற்றம் சுமத்தியுள்ளார்

இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர், 

இந்த அரசாங்கத்திற்கு எந்த ஒரு தெளிவான வேலை திட்டம் இல்லாமல் மக்களுக்கு பொய்களை கூறி வாக்குகளை பெற்று வென்று வந்தார்கள் ஆவர்.

ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கத்தில் பொய்களை கூறி தமிழ் மக்களை ஏமாற்றியது போன்று இந்த அரசும் அதனை தொடருகிறது.

அதற்கான காரணம் ஜனாதிபதியாக எவர் வந்தாலும் இலங்கை அரசை பாதுகாப்பதை தங்களுடைய பொறுப்பாக பார்க்கின்றார்கள்.

சில விடயங்களுக்காக பகிரங்க விவாதம் போவதாக இருந்தால் விவாதிக்கக்கூடிய தகுதி உடையவர்களுடன்தான் நாங்கள் விவாதிக்க முடியும்.

அவ்வாறு இல்லாதவர்களுடன் விவாதத்திற்கு செல்வது என்பது பொருத்தம் இல்லாத விடயம்” என்றார்.

Related Post

பிரபலமான செய்தி