மட்டக்களப்பில் நாளை நீர் வெட்டு !

user 07-Feb-2025 இலங்கை 145 Views

மட்டக்களப்பு நகரில் அமைந்துள்ள பிரதான நீர் சேமிப்பு தொட்டியினுடைய சுத்தப்படுத்துதல் நடவடிக்கை காரணமாக நாளை 8ம் திகதி அன்று காலை 8.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை நீர் வெட்டு அமுல்படுத்தப்படும்.

 

இதனால் மண்முனை வடக்கு, காத்தான்குடி, மண்முனைப்பற்று, ஏறாவூர், ஏறாவூர் பற்று, கோறளைப்பற்று தெற்கு, கோறளைப்பற்று (வாழைச்சேனை), கோறளைப்பற்று மத்தி, கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலகப் பிரிவுகளுக்குட்பட்ட நீர்ப்பாவனையாளர்களிற்கு நீர் வழங்குதல் தடைப்படும் என்பதை அறியத்தருகின்றோம். ஆகவே வழங்கப்படும் நீரை முன்கூட்டியே சேமித்து வைத்து தங்கள் பாவனைக்கு பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Related Post

பிரபலமான செய்தி