தமிழரசுக் கட்சியின் தேசியப் பட்டியலுக்கு முக்கிய ஆலோசனை

user 16-Nov-2024 இலங்கை 1747 Views

தேர்தலில் தோல்வியுற்ற தமிழரசுக் கட்சியின் யாழ். மாவட்ட வேட்பாளர் சுமந்திரன், தான் தோல்வியடைந்தால் தேசிய பட்டியல் மூலம் நாடாளுமன்றம் செல்ல மாட்டேன் என ஏற்கனவே அறிவித்திருந்தார்.

எனினும், கட்சியின் மத்திய குழு மேற்கொள்ளும் தீர்மானத்திற்கு தான் கட்டுப்படுவேன் எனவும் அவர் தற்போது கூறியுள்ளார்.  

இந்நிலையில், தமிழரசுக் கட்சியின் தேசியப் பட்டியலுக்கு யாரை தெரிவு செய்வது என்பது குறித்து தற்போது ஆலோசனைகள் நடந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, வடக்கு கிழக்கு தமிழர்களின் தலைவிதி எங்களுக்கு வாக்களிப்பதே என தமிழரசு கட்சியை சேர்ந்தோர் இவ்வளவு காலமும் எண்ணியமையே அக்கட்சியின் தோல்விக்கு காரணம் என கூறப்படுகின்றது.

மேலும், தமிழ் மக்களின் பிரச்சினைகளை பற்றி கவலை கொள்ளாது கட்சியின் வெற்றி தொடர்பாக மட்டுமே கவனம் செலுத்தியமையும் அவர்கள் நாடாளுமன்றத் தேர்தலில் குறைவான ஆசனங்களை பெற்றுக்கொள்ள ஒரு காரணமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Post

பிரபலமான செய்தி