எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிப்பதனை தவிர்க்க வேண்டாம் என முன்னாள் தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
அண்மையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பு ஒன்றின் போது அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
வாக்களிக்காதிருத்தல் அல்லது வாக்குச்சீட்டு சீட்டில் கிறுக்குவது பொருத்தமானது அல்ல. வாக்களிப்பதற்காக அனைவரும் வாக்களிப்பு நிலையங்களுக்கு செல்ல வேண்டும் என அவர் கோரியுள்ளார்.
வாக்களிப்பது எமது உரிமை, அது எமது அதிகாரம், அது எமது குரல், வாக்களிப்பதன் மூலம் நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்க முடியும் எனவே அனைவரும் வாக்களிக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
மரணத்தை தவிர வாக்குரிமை மட்டுமே அனைவருக்கும் பேதமின்றி கிடைக்கப்பெறுகின்றது எனவும் எனவே வாக்களிக்காதிருப்பது சரியான தீர்மானம் ஆகாது என அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.
வாக்களிப்பை புறக்கணிப்பதன் மூலம் வாக்களிக்கும் நபர்களுக்கு விருப்பமான ஒரு ஆட்சியாளர் ஆட்சி அதிகாரத்தில் அமர்வார் என மகிந்த தேசப்பிரிய சுட்டிக்காட்டி உள்ளார்.