மட்/பட்/வெல்லாவெளி கலைமகளுக்கு போட்டோப் பிரதி இயந்திரம் நலன் விரும்பி லலாசேகரன் வழங்கி வைப்பு..

user 25-Jan-2025 இலங்கை 87 Views

மட்/பட்/வெல்லாவெளி கலைமகள் மகா வித்தியாலத்தில் கல்வி கற்கும் மாணவர்களின் இயலுமையினை அதிகரிக்கும் நோக்கில் திணைக்களங்களும், தனிநபர்களும் பல்வேறு வகையில் பல விதங்களிலும் உதவி வருகின்றனர். அத்துடன்; பாடசாலையின் பழைய மாணவர்களால் மாணவர்களின் இயலுமையை அதிகரிக்கும் செயற்பாடுகளுக்கு தேவையான காரணிகளை இனங்கண்டும் பூர்த்தி செய்து வருகின்றனர். 

இந்த வகையில் பழைய மாணவர் சங்கத்தின் செயலாளர் பாலசுந்தரம் வரதராஜன் அவர்கள் கோவில்போரதீவினைச் சேர்ந்த தாமோதரம் லலாசேகரன் அவர்களிடம் போட்டோப் பிரதி இயந்திரம் ஒன்றினைப் பெற்றுத் தருமாறு முன் வைத்த கோரிக்கைக்கு மதிப்பளித்து இன்று (25.01.2025) 2,50,000 பெறுமதியான போட்டோப் பிரதி இயந்திரத்தினைப் பாடசாலையின் முதல்வர் அழகானந்தம் ஜெயப்பிரதாபனிடம் கையளித்திருந்தார்.

இந் நிகழ்வில் பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், பழைய மாணவர்சங்கச் செயலாளர் மற்றும் அதன் உறுப்பினர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் , நலன் விரும்பி தாமோதரம் லலாசேகரன் அவர்களின் குடும்பத்தினர் கலந்து கொண்டிருந்ததனர். இச் சந்தர்ப்பத்தில்  பாடசாலையின் முதல்வர் அழகானந்தம் ஜெயப்பிரதாபன் பொன்னாடை போர்த்தியும் மாணவர்கள் மாலையணிவித்தும், பாடசாலை பழைய மாணவர் சங்கச் செயலாளர் பாலசுந்தரம் வரதராஜன் நினைவுச் சின்னம் வழங்கியும் தாமோதரம் லலாசேகரன் அவர்களைக் கௌரவித்தனர். பாடசாலையின் உப அதிபர் க.இராமகிருஷணன்; பாடசாலைச் சமூகம் சார்பாக நன்றியினைத் தெரிவித்தார்.

Related Post

பிரபலமான செய்தி