தமிழ் அரசியல் தலைமைகளுக்கு பாடம் கற்பித்த நாடாளுமன்ற தேர்தல்!!!!!!!

user 18-Nov-2024 கட்டுரைகள் 122 Views

தென்னிலங்கையில் ஏற்பட்ட அரசியல் மாற்றத்தினைப் போன்று  தற்போது தமிழரின் பகுதிகளான தாயகத்திலும் மலையகத்திலும் மிகப்பெரிய அரசியல் மாற்றம் ஒன்று  நடந்துள்ளது. இந்த தேர்தலானது  நாட்டு மக்கள் அனைவரும் ஒரே அணியில் நிற்பதை காட்டியுள்ளது.

 

மேலும் இம்முறை நாடாளுமன்ற தேர்தல் தமிழ் அரசியல்வாதிகளுக்கு தகுந்த பாடம் கற்பித்துள்ளது. மலையகத்திலும் சரி தாயகத்திலும் சரி  இத்தனை காலமும் மக்களை ஏமாற்றிய கோமாளிகளை  மக்கள் புறக்கணித்து புதியவர்களுக்கு வாய்ப்பினை வழங்கியுள்ளார்கள்.

 

இதுவொரு வரலாற்று ரீதியான தேர்தல் ஆகும். இதுவரை காலமும் தாயகத்திலும் மலையகத்திலும் பெரும்பான்மையினக் கட்சி வெற்றிப் பெற்ற வரலாறு இல்லை.ஆனால் தற்போது நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. தேர்தல் பெறுபேறுகளை பார்த்தப் பின்னர் மூவின மக்களும் ஒரே அணியில் நின்றுள்ளார்கள் என்பது தெளிவாகிறது.

 

தாயகத்திற்கு கிடைக்கவிருந்த பல்வேறு அபிவிருத்திகளையும் தங்களின் சுயநல போராட்டங்களின் மூலமாக இல்லாமற் செய்தவர்களை மக்கள் இந்த தேர்தல் மூலம் இல்லாமல் செய்துவிட்டார்கள்.

 

அதேபோன்று வாரிசு அரசியலுக்கும், அடாவடி அரசியலுக்கும் , வயது முதிர்ந்தவர்களின் ஆதிக்க அரசியலையும் மக்கள் தூக்கியெறிந்துள்ளார்கள். மலையகத்தைப் பொருத்தவரையில் கட்சி விசுவாசம் என்ற கருத்தியல் அனைத்தும் தவிடுபொடியாகியுள்ளது . தங்களுக்குள் இருந்து தேசிய பட்டியலில் யாரை தெரிவு செய்வது என்பது கூட புரியாத புதிராக தமிழ் கட்சிகள் இன்று பரிதவித்துக்கொண்டிருக்கின்றன.

 

இது மக்கள் போலி அரசியல்வாதிகளுக்கு கற்பித்த தக்கப் பாடமாகும். புதியதொரு எதிர்பார்ப்பில் புதியதொரு அரசியல் பாதையில் காலடி வைத்துள்ள எமது தமிழ் மக்களின் நம்பிக்கையை காப்பாற்றும் கடப்பாடு தற்போது தேர்ந்தெடுக்கப்பட்ட வர்களுக்கு உள்ளது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

Related Post

பிரபலமான செய்தி