யாழில் காதலர் தினத்தை கொண்டாட காதலி மறுத்ததால் இளைஞன் உயிர்மாய்ப்பு !

user 13-Feb-2025 இலங்கை 118 Views

காதலர் தினத்தை கொண்டாட யாழ்ப்பாணம் செல்ல தனது காதலி விரும்பாததால் மனமுடைந்த கிளிநொச்சியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் நேற்று (12) கிணற்றில் குதித்து உயிரைமாய்த்துக் கொண்டுள்ளதாக  தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்தில் கிளிநொச்சி தர்மபுரம்  பகுதியைச் சேர்ந்த   இளைஞர் ஒருவரே   உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில்  மேலும்  தெரியவருகையில், 

இந்த வருடம் காதலர் தினத்தைக் கொண்டாடுவதற்காக யாழ்ப்பாணம் சென்று வர அவர் தனது காதலியை பலமுறை கேட்டதாகவும்,  எனினும்  பெண் அதற்கு சம்மதிக்கவில்லை என்றும் கூறப்படுகின்றது.

சம்பவம் நடந்த நாளில், அந்த இளைஞன் தனது காதலிக்கு பலமுறை தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டதாகவும், ஆனால் அவர் பதிலளிக்காமல் தொலைபேசி இணைப்பை துண்டித்துவிட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதனால் மனஉளைச்சலுக்குள்ளான இளைஞர், கிணற்றில் குதித்து உயிரைமாய்த்துக் கொண்டதாக கூறப்படுகின்றது.

கிணற்றிலிருந்து இளைஞனின் உடலை தர்மபுரம் காவல்துறையினர் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை   பொலிஸார்  மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகின்றது.

Related Post

பிரபலமான செய்தி