அம்பாறையில் தனித்து களமிறங்கவுள்ள தமிழரசுக்கட்சி !

user 10-Mar-2025 இலங்கை 54 Views

அம்பாறை மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பாக போட்டியிடும் பேச்சுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தமிழரசுக்கட்சி இம்முறை தனித்தே போட்டியிடுகின்றது எனவும் கட்சியின் பொதுச் செயலாளர் எம். ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி சபை தேர்தல் எதிர்கொள்வது தொடர்பில் இடம்பெற்ற அம்பாறை மாவட்ட தமிழரசுக்கட்சி முக்கியஸ்தர்களுடனான கலந்துரையாடலின்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இதன் போது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியும் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளருமான எம். ஏ. சுமந்திரன் கல்முனைத் தொகுதித் தலைவர் அ.நிதான்சன் சம்மாந்துறை தொகுதியின் தலைவரும் மு.நாடாளுமன்ற உறுப்பினருமான த.கலையரசன் மற்றும் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர்களும் கலந்து கொண்டு தீர்மானங்கள் எட்டப்பட்டது.

மேலும், எதிர்வரும் வாரத்திற்குள் இலங்கை தமிழரசுக்கட்சியின் வேட்பாளர் பட்டியலை இறுதி செய்வதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இதன்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது இக்கூட்டத்தில் உள்ளூராட்சி சபை தேர்தல் எதிர்கொள்வது தொடர்பில் ஆராயப்பட்டதுடன் அம்பாறை மாவட்டத்தில் உள்ள அனைத்து சபைகளும் கைப்பற்றப்படல் வேண்டும் பெண்கள் பிரதிநிதித்துவம் இளைஞர்களுக்கு தேர்தலில் பங்கேற்க வாய்ப்பு வழங்குதல் உட்பட இலங்கை தமிழரசுக்கட்சியானது இம்முறை உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன் வேட்பாளர்கள் தெரிவு தொடர்பிலும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.

 

 

Related Post

பிரபலமான செய்தி