யாழ். பல்கலை மாணவர்களின் விளக்கமறியல் நீடிப்பு

user 11-Dec-2025 இலங்கை 33 Views

பகிடிவதை புரிந்த குற்றச்சாட்டில் கைதான யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீட மாணவர்கள் 19 பேரின் விளக்கமறியலை நாளைய தினம் 12ஆம் திகதி வரை மன்று நீடித்துள்ளது.

பல்கலைக்கழகத்திற்குள் வெளியே உள்ள வீடொன்றுக்கு கனிஷ்ட மாணவர்களை அழைத்துச் சென்று தாக்குதல் நடத்தி பகிடிவதையில் ஈடுபட்டுள்ளனர் என்ற குற்றச்சாட்டில் பெரும்பான்மை இன சிரேஷ்ட மாணவர்கள் 19 பேர் கடந்த மாதம் 29ம் திகதி கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி நேற்றைய தினம் புதன்கிழமை வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

நேற்றைய மீண்டும் மாணவர்களை மன்றில் முற்படுத்திய வேளை, 19 பேரையும் நாளைய தினம் 12ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டது. 

Related Post

பிரபலமான செய்தி