எரிந்த நிலையில் மீட்கப்பட்ட ஆசிரியரின் சடலம்

user 31-Dec-2025 இலங்கை 35 Views

கொஸ்கம, மூணமலேவத்த மைதானத்திற்கு அருகிலுள்ள ஒரு வீட்டில் எரிந்து இறந்த நிலையில், பாடசாலை ஆசிரியரின் சடலம் இன்று (31) கண்டெடுக்கப்பட்டதாக கொஸ்கம பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

இறந்தவர் மின்விசுதுருகம, ஹல்பே பகுதியைச் சேர்ந்த 39 வயதானவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

பாடசாலை ஆசிரியரான இவர், ஹன்வெல்லவில் உள்ள கல்லூரி ஒன்றில் கடமையாற்றி வந்த அவர் வாடகைக்கு வீட்டில் தங்கியிருந்ததாக  பொலிஸார் தெரிவித்தனர்.

வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது உடல் தீப்பிடித்ததா?, மின் கசிவால் தீ ஏற்பட்டதா? அல்லது தீப்பிடித்து தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்து கொஸ்கம பொலிஸார் மேலும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Post

பிரபலமான செய்தி