தையிட்டி விகாரை தொடர்பில் எந்த முடிவும் இதுவரை எட்டப்படவில்லை!

user 11-Feb-2025 இலங்கை 175 Views

யாழ்ப்பாணம்(Jaffna) - தையிட்டியில் அமைந்துள்ள பௌத்த விகாரை தொடர்பாக அரசாங்கத்தில் எவ்விதமான பேச்சுவார்த்தையும் இடம்பெறவில்லை என புத்த சாசன, சமய மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சர் ஹினிதும சுனில் செனவி தெரிவித்துள்ளார்.

தனியாருக்குச் சொந்தமான காணியில் அமைந்துள்ளதாகக் கூறப்படும் விகாரையை அகற்ற வலியுறுத்தி இன்று(11) முதல் அங்குப் பாரிய போராட்டம் ஒன்றுக்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

குறித்த விகாரை தொடர்பில்  புத்த சாசன அமைச்சர் கூறியதாவது,“ அண்மையில் யாழ்ப்பாணம் சென்ற போது  தையிட்டி விவகாரம் தொடர்பில் அறியகிடைத்தது.

இதுவொரு பாரதூரமான விடயம் என்பதால், சகல தரப்பினரையும் இணைத்துக் கலந்துரையாட வேண்டும் என தீர்மானித்திருந்தோம்.

எனினும், இதுவரை அரசாங்க மட்டத்தில் எந்தவித கலந்துரையாடலும் நடத்தப்படவில்லை.” என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Related Post

பிரபலமான செய்தி