தித்வா புயலினால் ஏற்பட்ட அழிவுகளிலிருந்து நாட்டை மீட்டெடுக்கும் முயற்சிக்கு வலுசேர்க்கும் வகையில், ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்காக HNB PLC நிறுவனம் 100 மில்லியன் ரூபாயை பங்களிப்பாக வழங்கியுள்ளது.
“Rebuilding Sri Lanka நிதியத்திற்கு HNB வழங்கியுள்ள பங்களிப்பானது, இந்த கூட்டுப் பணிக்கு எமது அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும் ஒரு அடையாளமாகும். இது நீண்ட மற்றும் சவாலான ஒரு செயன்முறை என்பதை நாம் உணர்ந்துள்ளோம்.
இருப்பினும், உடனடியான மற்றும் நீண்டகால மீட்பு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க நாம் தயாராகவும் உறுதியுடனும் இருக்கின்றோம்,” என HNB முகாமைத்துவ பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான தமித் பல்லேவத்த தெரிவித்துள்ளார்.