இலங்கை வந்த அமெரிக்க கடற்படையின் ஏவுகனை நாசகாரி கப்பல் !

user 17-Nov-2024 இலங்கை 1124 Views

அமெரிக்க கடற்படையின் யுஎஸ்எஸ் மைக்கேல் மர்பி (USS Michael Murphy) கப்பல், கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

குறித்த கப்பல் எரிபொருள் நிரப்பும் பயணமாக இன்று (16.11.2024) கொழும்பை வந்தடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கப்பலை  இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கு அமைவாக வரவேற்றனர்.

155.2 மீற்றர் நீளமுள்ள இந்த ஏவுகணை நாசகாரி கப்பல் 333 பேர் கொண்ட குழுவினரால் நிர்வகிக்கப்படுகிறது.

இந்தநிலையில், நிரப்புதல் தேவைகளை நிறைவு செய்த பின், யுஎஸ்எஸ் மைக்கேல் மர்பி நவம்பர் 17ஆம் திகதி கொழும்பில் இருந்து புறப்படவுள்ளது. 

Related Post

பிரபலமான செய்தி