மலையக ரயில் மார்க்கத்தில் ரயில் சேவைகள் பாதிப்பு!

user 28-Jun-2025 இலங்கை 39 Views

ரம்புக்கனை ரயில் நிலையத்தில் ரயில் ஒன்று தடம்புரண்டதால், மலையக ரயில் மார்க்கத்தில் ரயில் சேவைகளுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.

கொழும்பில் இருந்து ரம்புக்கனை நோக்கி பயணித்த ரயில் ஒன்று இவ்வாறு தடம்புரண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனால், மலையக ரயில் மார்க்கத்தின் பயண நடவடிக்கைகள் முற்றாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பயணிகளை பேருந்துகள் மூலம் பயணிக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாகவும் ரயில் நிலைய பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

தற்போது தடம்புரண்ட ரயிலை மீண்டும் தடமேற்றும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள போதிலும், அதற்கு மேலும் சில மணித்தியாலங்கள் ஆகலாம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

Related Post

பிரபலமான செய்தி