அரசியல் குழப்பங்களுக்கு மத்தியில் அமைச்சரவையை மாற்றியமைக்கும் ட்ரூடோ!

user 21-Dec-2024 சர்வதேசம் 628 Views

கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ (Justin Trudeau) வெள்ளிக்கிழமை (20) ஒரு பெரிய அமைச்சரவை மாற்றத்தை அறிவிப்பார் என்று கனேடிய அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ட்ரூடோ பதவியேற்பு விழாவில் பங்கேற்பார் என்றும் வெள்ளிக்கிழமை பிற்பகுதியில் தனது புதிய அமைச்சரவையுடன் ஒரு கூட்டத்திற்கு தலைமை தாங்குவார் என்றும் பிரதமர் அலுவலகம் வியாழன் (19)பிற்பகுதியில் உறுதிப்படுத்தியது.

சுமார் 10 ஆண்டுகாலம் பிரதமர் பதவியில் இருக்கும் ஜய்டின் ட்ரூடோவின் புகழானது பணவீக்கம், குடியேற்றம் பற்றிய கவலைகளால் சரிந்துள்ளது.

மேலும் திங்களன்று அவரது நிதியமைச்சர் திடீரென பதவி விலகியமை ஜஸ்டின் ட்ரூடோவின் அரசாங்கத்தில் பாரிய சிக்கலை ஏற்படுத்தியது.

ட்ரூடோவின் ஆளும் தாராளவாதிகள் ஆட்சியில் நீடிக்க நம்பியிருக்கும் எதிர்க்கட்சியான புதிய ஜனநாயகக் கட்சியின் தலைவரான ஜக்மீத் சிங், திங்கட்கிழமை பிரதமரை இராஜினாமா செய்யுமாறு அழைப்பு விடுத்தார்.

ஆனால் புதிதாக நியமிக்கப்பட்ட நிதியமைச்சர் டொமினிக் லெப்லாங்க் வியாழக்கிழமை ட்ரூடோவுக்கு அவரது அமைச்சரவையின் முழு ஆதரவு உள்ளது என்றார்.

இந் நிலையில் வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்படும் இடம்பெறும் மாற்றத்தில் தற்போதைய 35 உறுப்பினர்களைக் கொண்ட அமைச்சரவையில் 2025 இல் மீண்டும் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று சூசுமமாக வெளிப்படுத்தியவர்களுக்கு பதிலாக புதிய அமைச்சர்கள் நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், ஏனையவ்கள் அரசாங்கத்தில் இரட்டை அல்லது மூன்று பொறுப்புகளில் இருந்து விடுவிக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

Related Post

பிரபலமான செய்தி