பதுளை-கந்தகெட்டிய விபத்தில் 12 பேர் படுகாயம்!

user 17-Feb-2025 இலங்கை 354 Views

பதுளை – கந்தகெட்டிய பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் 12 பேர் படுகாயமடைந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்

தனியார் பேருந்தும் ஆடைத் தொழிற்சாலையிலிருந்து வந்த குழுவை ஏற்றிச் சென்ற வேனும் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது

இதில் காயமடைந்தவர்கள் கந்தகெட்டிய பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளதுடன் அவர்களில் ஏழு பேர் மேலதிக சிகிச்சைக்காக மஹியங்கனை ஆதார மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் கந்தகெட்டிய பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மேலும் வீதியின் குறுகிய சாலையின் வளைவுப் பகுதியில் இரண்டு வாகனங்களும் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

Related Post

பிரபலமான செய்தி