திருகோணமலை மாவட்ட செயலகத்தில் மாவட்ட விசேட விவசாயக்குழு கூட்டம் பாராளுமன்ற மன்ற உறுப்பினர் ரொஷான் அக்மீமன அவர்களின் பங்குபற்றலுடன் மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ.ஜி.எம். ஹேமந்த குமார அவர்களின் தலைமையில் நடைபெற்றதுள்ளது
கூட்டத்தின் ஆரம்பத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் வரவேற்புரையாற்றியதுடன் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள விவசாய சேதங்களை துல்லியமாக அடையாளம் காணும் பணிகளில் சம்பந்தப்பட்ட அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியது அவசியம் என வலியுறுத்தினார்.
அண்மையில் பதிவான பாதகமான காலநிலை காரணமாக விவசாயத் துறையில் ஏற்பட்டுள்ள சேதநிலைகள் தொடர்பாகத் தகவல் சேகரிப்பு, மதிப்பீடு மற்றும் மீட்பு நடவடிக்கைகள் குறித்து விரிவான கலந்துரையாடல் இடம்பெற்றது.
மேலும் தித்வா சூறாவளியின் தாக்கத்தால் மாவட்டத்தில் விவசாயத் தொழிலுக்கு ஏற்பட்ட சேதங்களை மதிப்பாய்வு செய்தல், சேதமடைந்த கால்வாய்கள், நீர்ப்பாசன அமைப்புகள் மற்றும் விவசாய சாலைகளை விரைவில் சரிசெய்தல், ஏற்பட்ட சேதங்களுக்கு விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கும் செயல்முறையை விரைவுபடுத்துதல், முக்கிய பருவத்திற்கான சாகுபடி நடவடிக்கைகளை மீண்டும் தொடங்குதல் போன்ற பல விடயங்கள் இதன்போது கலந்துரையாடப்பட்டன.