பரந்தன் முல்லைத்தீவு A-35 வீதியின் பதினோராவது கிலோமீற்றரிலுள்ள பாலமானது வெள்ள அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்டிருந்தது.
இந் நிலையில் இந்திய இராணுவத்தினரின் பங்களிப்புடன் இலங்கை இராணுவம், வீதி அபிவிருத்தி அதிகார சபை இணைந்து புனரமைப்பு பணியில் இரண்டாவது நாளாக ஈடுபட்டுவருகின்றனர்.
குறித்த புனரமைப்பு பணியை யாழ். இந்தியத் துணைத்தூதுவர் சாய் முரளி உள்ளிட்ட குழுவினர் பார்வையிட்டு இந்திய இராணுவத்தினருடன் கலந்துரையாடிருந்தார்.
கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் எஸ். முரளிதரன் மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபை பிரதம பொறியியலாளர், கிளிநொச்சி இராணுவ உயரதிகாரிகள் கடற்தொழில் அமைச்சின் செயலாளர் மருங்கன் மோகன் என பலரும் கலந்து கொண்டனர் .