ரஷ்யாவிடம் இழந்த பகுதிகளை நிச்சயம் மீட்போம்!

user 14-Feb-2025 சர்வதேசம் 155 Views

”ரஷ்யாவிடம் இழந்த பகுதிகளை தாம் நிச்சயம் மீட்போம் ”என  நேட்டோ இராணுவக் கூட்டமைப்பிடம் உக்ரேன் உறுதியளித்துள்ளது.

ரஷ்யா கைப்பற்றிய பகுதிகளை உக்ரேனால் இனி திரும்பப் பெற முடியாது என்பதை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என  அண்மையில் அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சா் பீட் ஹெக்செத் கூறிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்து.

இந்நிலையில் குறித்த கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் உக்ரேன் பாதுகாப்புத் துறை அமைச்சா் ருஸ்தம் உமெரொவ், நோட்டோ தலைவர்  மார் க் ரூட்டை,  நேட்டோ தலைமையகத்தில்  அண்மையில் சந்தித்துப்  பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

இதன்போது உக்ரேனுக்கு நேட்டோ அமைப்பு தொடர்ந்து அளித்துவரும் ஆதரவுக்கு நன்றி எனவும்,  அனைத்து நட்பு நாடுகளும் தங்களுக்கு ஆதரவு அளிக்கின்றன எனவும், அமெரிக்காவும் தம்முடன் தான் உள்ளது எனவும், எனவே உக்ரேனுக்கு பாதுகாப்பு உத்தரவாதம் அளிப்பதற்கான செயல்பாடுகள் முன்னெடுத்துச் செல்லப்படுகின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Post

பிரபலமான செய்தி