மன்னார் போராட்டத்தில் வன்முறையை தூண்டியவர்களை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை !

user 22-Nov-2024 இலங்கை 1441 Views

மன்னார் (Mannar) பொது வைத்தியசாலையில் இறந்த இளம் தாயின் மரணத்திற்கு நீதி கோரி நேற்று முன்தினம் (20) மாலை மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு முன் அமைதியான முறையில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இதன்பொது பொது சொத்துக்களை சேதப்படுத்தி வன்முறையை தூண்டும் விதமாக செயற்பட்ட நபர்களை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.

குறிப்பாக வைத்தியசாலைக்குள் நுழைந்து கண்ணாடிகளை சேதமாக்கியவர்கள், பொலிஸார் மீது கற்கள் வீசியவர்கள் , டயர்கள் உள்ளிட்ட பொருட்களை வீதிகளில் எரித்து மக்களின் போராட்டத்தை திசை திருப்பியவர்களை கைது செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

வைத்தியசாலை CCTV கேமரா மற்றும் போராட்டத்தின் போது எடுக்கப்பட்ட காணொளிகளை சேகரித்து அதன் ஊடாக அமைதியான போராட்டத்தை திசை திருப்பி வன்முறை ஆக்கியவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவர்களை கைது செய்ய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Related Post

பிரபலமான செய்தி