பிரான்ஸ் பாடசாலைகள் முன் குவிக்கப்படவுள்ள பொலிஸார் !

user 22-Feb-2025 சர்வதேசம் 333 Views

பிரான்ஸ் பாடசாலைகளில் மாணவர்களின் பைகளை சோதனையிடுவதற்காக பொலிஸார் நியமிக்கப்பட உள்ளனர்.

பிரான்ஸில் மாணவர்கள் கத்தி போன்ற ஆயுதங்களை பாடசாலைக்கு கொண்டு செல்வதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்த தீர்மானித்துள்ளதாக பிரான்ஸ் கல்வி அமைச்சர் எலிசபெத் போர்ன் அறிவித்துள்ளார்.

பொலிஸாருக்கு மாணவர்களின் பைகளை சோதனையிட அனுமதி வழங்கப்பட்டுள்ள போதிலும் பாடசாலை அதிபர் மற்றும் ஆசிரியர்களுக்கு குறித்த அனுமதி வழக்கப்படவில்லை

இவ்வாறு சோதனை மேற்கொள்ளும் போது மாணவர்களிடம் கத்தி போன்ற ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டால் சட்ட அதிகாரிகளுக்கு தகவல் வழங்கப்பட்டு அவர்கள் தண்டணைக்குழுவில் முன்நிறுத்தப்படுவார்கள்.

முன்னதாக, பாரிசின் பன்யே பகுதியில் 17 வயது மாணவர் ஒருவர் கத்திக்குத்துக்கு இலக்காகி படுகாயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.       

Related Post

பிரபலமான செய்தி