தனியார் பேருந்துகளுக்கான வீதி அனுமதி பத்திரம் !

user 06-Mar-2025 இலங்கை 61 Views

நாட்டில் சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்துகளில் சிசிடிவி பாதுகாப்பு கமரா கட்டமைப்பு இருந்தால் மாத்திரமே வீதி அனுமதி பத்திரம் வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த விடயத்தினை தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் பி.டி. விதாரன (P. D. Vitharana) தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் (DGI) நேற்று (05) நடைபெற்ற விசேட ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். 

அத்துடன் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பான முறைப்பாடுகளை அறிவிப்பதற்கு தொலைபேசி இலக்கத்தை அறிமுகப்படுத்துவதற்கு எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

இந்த நிலையில் பொதுப் போக்குவரத்தின் போது பெண்களுக்கு ஏற்படும் வன்முறைகளைத் தவிர்ப்பதற்காக நீண்ட கால வேலைத்திட்டம் ஒன்று அவசியம் என்றும் பி.டி. விதாரன தெரிவித்தார்.

இதேவேளை பொதுப் போக்குவரத்தைப் பெண்களுக்கான பொது இடமாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் இதன் போது சுட்டிக்காட்டியமை குறிப்பிடத்தக்கது.

Related Post

பிரபலமான செய்தி