கொழும்பு, விஜேராம மாவத்தையிலுள்ள வதிவிடத்தில் இருந்து மஹிந்த ராஜபக்ச ஹம்பாந்தோட்ட தங்காலை கால்டன் இல்லத்துக்கு இன்று செல்கின்றார்.
இதனைத் தொடர்ந்து, ஒரு வாரத்துக்குள் அவரது தற்போதைய வதிவிடமான விஜேராமா இல்லம் அரசாங்கத்திடம் அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலைமை குறித்து மஹிந்த ராஜபக்சவின் ஊடகப் பேச்சாளர், சட்டத்தரணி மனோஜ் கமகே வெளியிட்டுள்ள அறிக்கையில்,
"30 வருடகால போருக்கு முடிவை கொண்டுவந்த தலைவர் இன்று வீட்டை விட்டு வெளியேற நேரிடுகிறது. இது தான் நன்றிக்கடனை செலுத்தும் விதமா?
சிங்கம் காட்டில் இருந்தாலும் சிங்கம்தான், நகரத்தில் இருந்தாலும் சிங்கம்தான்,” என்று அவர் தெரிவித்தார்.