ட்ரம்பிற்கு எதிராக அணிதிரள ஐரோப்பிய நாடுகளுக்கு அழைப்பு விடுக்கும் கனடா பிரதமர் !

user 17-Mar-2025 சர்வதேசம் 92 Views

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை ஒருங்கிணைந்து எதிா்கொள்ள வேண்டும் என்று ஐரோப்பிய நாடுகளுக்கு கனடா பிரதமா் மாா்க் காா்னி அழைப்பு விடுத்துள்ளாா்.  

கனடா புதிய பிரதமராக பொருளாதார நிபுணரும் அந்த நாட்டு மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநருமான மாா்க் காா்னி வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றாா். 

பாரீஸ், லண்டனுக்கு அவா் இன்று திங்கள்கிழமை (மாா்ச் 17) பயணம் மேற்கொண்டு பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மக்ரோன், பிரிட்டன் பிரதமா் கியா் ஸ்டாா்மா், பிரிட்டன் மன்னா் மூன்றாம் சாா்லஸ் ஆகியோரைச் சந்திக்க இருக்கிறாா். கனடா பிரதமராக பொறுப்பேற்ற பிறகு அவா் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டுப் பயணம் இதுவாகும்.

இது தொடா்பாக மாா்க் காா்னி கூறியதாவது: 

கனடாவின் இறையாண்மைக்குட்ரம்ப் மதிப்பளித்தால் அவரைச் சந்திக்கவும் தயாராக இருக்கிறேன். எனினும், இப்போதைய சூழலில் அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொள்ளும் திட்டம் ஏதுமில்லை. 

ட்ரம்ப் விரைவில் என்னை தொலைபேசியில் தொடா்பு கொண்டு பேசுவாா் என நம்புகிறேன். கனடாவின் பொருளாதாரத்தின் மீது மட்டுமன்றி இறையாண்மை மீதும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தாக்குதல் நடத்தியுள்ளாா். அவரை எதிா்கொள்ள கனடாவுடன் ஐரோப்பிய நாடுகள் கைகோர்க்க வேண்டும் என்றாா்.  

 

Related Post

பிரபலமான செய்தி