ஏடன் வளைகுடாவில் கப்பல்கள் மீதான ஹவுத்திகளின் தாக்குதலை முறியடித்த அமெரிக்க படை!

user 11-Dec-2024 சர்வதேசம் 1002 Views

ஏடன் வளைகுடாவில் வணிகக் கப்பல்களை குறிவைத்து ஏமனின் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் நடத்திய ஏவுகணை-ட்ரோன் தாக்குதலை இரண்டு அமெரிக்க கடற்படை கப்பல்கள் வெற்றிகரமாக முறியடித்துள்ளன.

இதனால், வணிகக் கப்பல்களுக்கோ அதில் பயணித்த பணியாளர்களுக்கோ எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்று அமெரிக்க மத்திய கட்டளை (CENTCOM) செவ்வாயன்று தெரிவித்துள்ளது.

அமெரிக்க இராணுவத்தின் கூற்றுப்படி, டிசம்பர் 9-10 ஆம் திகதிகளில் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களின் வான் தாக்குதல்களை USS Stockdale (DDG 106) மற்றும் USS O’Kane (DDG 77) என்ற அமெரிக்க நாசகாரக் கப்பல்கள் முறிடித்தன.

இந்த நடவடிக்கைகள், ஈரான் ஆதரவு ஹவுத்திகளின் தாக்குதல்களுக்கு எதிராக அமெரிக்க பணியாளர்கள், பிராந்திய பங்காளிகள் மற்றும் சர்வதேச கப்பல் போக்குவரத்து ஆகியவற்றைப் பாதுகாப்பதற்கான தமனது படைகளின் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது என்று CENTCOM தெரிவித்துள்ளது.

ஹவுத்தி குழு, பாலஸ்தீனத்திற்கு அதன் ஆதரவையும், இஸ்ரேலுடன் இணைக்கப்பட்ட எந்தவொரு கப்பல்களையும் தாக்கும் அதன் நோக்கத்தையும் முன்னர் அறிவித்தது.

இந்த அறிவிப்புக்கு மத்தியில் செங்கடல் வழியாக கப்பல் போக்குவரத்தை நிறுத்த சில நிறுவனங்கள் முடிவு செய்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related Post

பிரபலமான செய்தி