தங்க நகை திருட்டு சம்பவம் தொடர்பில் திருகோணமலையில் மூன்று இளைஞர்கள் கைது

user 01-Jun-2025 இலங்கை 149 Views

  திருகோணமலை உப்புவெளி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் நேற்று முன்தினம் (29) இடம்பெற்ற தங்க நகை திருட்டு சம்பவம் தொடர்பில் மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் 22, 25, 28 வயதுடையவர்கள் ஆவார். சந்தேக நபர்களிடமிருந்து திருடப்பட்ட நகைகள் மற்றும் அடகு வைக்கப்பட்டு பெறப்பட்ட 1 இலட்சத்து 65 ஆயிரம் ரூபா பணம் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்த கைது நடவடிக்கை, பதில் பொறுப்பதிகாரி சம்பத் தலைமையில், பொலிஸ் அதிகாரிகள் ஜேம்ஸ், பார்க்க, செனவிரத்ன, சிந்திக்க, குமாரசேகர, நிஸான், யுவகாந்த் மற்றும் காவிந்தி ஆகியோரின் ஒருங்கிணைந்த முயற்சியினால் மேற்கொள்ளப்பட்டது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Related Post

பிரபலமான செய்தி