கிளிநொச்சியில் பிரபல பாடகர்களின் மாபெரும் இசை நிகழ்வு

user 21-Jun-2025 இலங்கை 60 Views

  கிளிநொச்சியில் தென்னிந்திய பிரபல பாடகர்கள் கலந்துகொள்ளவுள்ள மாபெரும் இசைக் கொண்டாட்டம் இன்று (ஜூன் 21) மாலை 6.30 மணிக்கு நடைபெறவுள்ளது.

இலங்கையின் முதல் தமிழ் பெண் இசையமைப்பாளர் பிரபாலினி பிரபாகரனின் ஏற்பாட்டில், கிளிநொச்சி மத்திய கல்லூரி மைதானத்தில் “வன்னியின் இசைத் தென்றல்” இசை நிகழ்ச்சி இன்று நடைபெறவுள்ளது.

ஈழத்தின் புகழ்பெற்ற சாந்தன் இசைக் குழுவின் இசையமைப்பில், தென்னிந்திய பிரபல பாடகர்களான சத்தியன், திவாகர், பத்மலதா ஆகியோர் நிகழ்வில் பாடவுள்ளனர்.

அத்துடன் ஈழத்தின் புகழ்பெற்ற பாடகர் கோகுலன் உள்ளிட்டவர்களும் பாடல்களைப் பாடி இரசிகர்களை மகிழ்விக்கவுள்ளனர்.

இந்நிலையில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களை உற்சாகப்படுத்தி, இசையின் மூலம் அவர்களை மகிழ்விக்கும் நோக்கில் “வன்னியின் இசைத் தென்றல்” நிகழ்ச்சி இலவசமாக நடத்தப்படுவதாகவும், இசைக் கலைஞர்களைக் கௌரவிக்கவுள்ளதாகவும் நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர் பிரபாலினி பிரபாகரன் தெரிவித்தார்.

Related Post

பிரபலமான செய்தி