வடக்கு - கிழக்கு பகுதிகளில் இராணுவ அடக்குமுறைகளுக்கு எதிராக இன்று (18) கதவடைப்பு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
கதவடைப்பு போராட்டம் பல்வேறு பகுதிகளிலும் முன்னெடுக்கப்படுகின்றது.
கதவடைப்பு போராட்டம்
இந்நிலையில், கிளிநொச்சி மாவட்டத்தில் குறித்த கதவடைப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவில்லை.
குறிப்பாக பொதுச்சந்தை மற்றும் நகர வர்த்தக நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
மேலும், போக்குவரத்துகள், வங்கி செயற்பாடுகள் அனைத்துமே வழமை போல் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.