ரஷ்யா - உக்ரைன் போர் நிறுத்த விவகாரம் !

user 11-Dec-2024 சர்வதேசம் 1546 Views

ரஷ்யாவுக்கு எதிரான மோதலின் தீவிரத்தை தடுப்பதற்கான பேர் நிறுத்த பேச்சுவார்த்தைகள் அடுத்த வாரம் உக்ரைனில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக போலந்து நாட்டின் பிரதமர் டொனால்ட் டஸ்க் தெரிவித்துள்ளார்.

போலந்து மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் முயற்சிகளுக்கு அமைய பேச்சுவார்த்தையின் நகர்வானது உக்ரைனின் அமைதிக்கானதாய் அமையும் என்றும் டொனால்ட் டஸ்க் கூறியுள்ளார்.

அமெரிக்காவின் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப் உக்ரைனின் போரை முடிவுக்கு கொண்டு வர வலியுறுத்தி வருகிறார்.

இந்நிலையிலேயே இருதரப்பு மோதலை ஐரோப்பிய ஒன்றியம் சார்ந்த பல்வேறு அமைப்புக்கள் நிறுத்துவதற்கு தீவிரம் காட்டி வருகின்றன.

ட்ரம்ப் உக்ரைனுக்கான இராணுவ உதவியைக் குறைப்பதற்கும் அமெரிக்காவை நேட்டோவிலிருந்து வெளியேற்றுவதற்குமான முயற்சிகளை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்த கருத்தை தொடர்ந்தே இந்த முயற்சியில் ஐரோப்பிய நாடுகள் இறங்கியுள்ளன.

Related Post

பிரபலமான செய்தி