2024 O/L பரீட்சை மீள் திருத்த முடிவுகள் வெளியீடு...

user 09-Oct-2025 இலங்கை 27 Views

இலங்கைப் பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்ளங்களான www.doenets.lk அல்லது www.results.exams.gov.lk க்குச் சென்று, பரீட்சை எண் அல்லது தேசிய அடையாள அட்டை எண்ணை உள்ளிடுவதன் மூலம் முடிவுகளைப் பார்வையிடலாம்.

மீள் திருத்த முடிவுகளின் அடிப்படையில் 2025 க.பொ.த. (சா.த.) தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் இன்று (09) நள்ளிரவு 12.00 மணி வரை ஒன்லைனில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.

மேலும், விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்கான இறுதித் திகதி எக்காரணம் கொண்டும் நீட்டிக்கப்படாது என்றும் பரீட்சைத் திணைக்களம் வலியுறுத்தியுள்ளது.

இந்தப் பரீட்சைப் பெறுபேறுகள் தொடர்பாக ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் பின்வரும் இலக்கங்கள் மூலம் தொடர்பு கொள்ளலாம்.

துரித எண்- 1911

தொலைபேசி எண்- 0112784208, 0112784537, 0112785922

தொலைநகல் எண் – 0112784422

Related Post

பிரபலமான செய்தி