தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு சிரமதானம் செய்யும் நிகழ்வும்

user 11-Oct-2025 இலங்கை 23 Views

தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு தோப்பூர் பொது நூலக வளாகத்தை சிரமதானம் செய்யும் நிகழ்வும் மரநடுகையும் நேற்று (10) காலை இடம்பெற்றது.

மூதூர் பிரதேச சபையின் தவிசாளர் எஸ்.பிரகலாதன் அவர்களின் ஆலோசனைக்கு அமைவாக தோப்பூர் உப அலுவலக பொறுப்பதிகாரி என்.அஸ்ரா தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

மூதூர் பிரதேச சபையின் தோப்பூர் உப அலுவலக உத்தியோகத்தர்கள்,ஊழியர்கள் இவ் சிரமதான நிகழ்விலும், மர நடுகையிலும் ஈடுபட்டிருந்தனர்.

தேசிய வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு தோப்பூர் பொது நூலகத்தினால் பாடசாலை மாணவர்கள், வாசகர்களுக்கிடையில் ஏற்கனவே போட்டி நிகழ்ச்சிகள் நடாத்தி முடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவ்வருட தேசிய வாசிப்பு மாதம் “மறுமலர்ச்சிக்காக வாசிப்போம்” எனும் தொணிப் பொருளின் கீழ் நாடளாவிய ரீதியில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Post

பிரபலமான செய்தி