சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாவற்குழி பகுதியைச் சேர்ந்த யுவதி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார்.
ஐயனார் கோவிலடி, நாவற்குழி பகுதியைச் சேர்ந்த 20 வயது யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இது குறித்து மேலும் தெரியவருகையில்,
இவர் தனக்கு தானே தீ வைத்து தற்கொலைக்கு முயற்சித்துள்ள நிலையில் தீயை அணைத்த காதலன், அவரை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்ப்பித்துள்ளார்.
இருப்பினும் சிகிச்சை பலனின்றி குறித்த யுவதி உயிரிழந்துள்ளார்.
மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.