யாழில் சடலமாக மீட்கப்பட்ட மூன்று பிள்ளைகளின் தாய் !

user 09-Dec-2024 இலங்கை 498 Views

யாழ்ப்பாணம்(Jaffna) பருத்தித்துறை கற்கோவளம் - வராத்துப்பளை பகுதியில் குடும்பப் பெண் ஒருவரின் சடலம் கம்பி வலையால் மூடப்பட்ட பொதுக்கிணற்றுக்குள் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

சடலமாக மீட்கப்பட்ட குறித்த பெண் நேற்று முன்தினம் முதல் காணாமல் போயுள்ள நிலையில் அவரது குடும்பத்தார் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர். 

இந்த நிலையில், அப்பகுதியில் உள்ள கம்பி வலையால் மூடிய கிணற்றடி பகுதியில் தொலைபேசி சத்தம் கேட்டுள்ளதனையடுத்து காணாமல் போன பெண்ணின் மகன்  அங்கு சென்று பார்த்த வேளை கிணற்றுக்குள் தனது தாயாரின் சடலம் இருப்பதை அவதானித்துள்ளார். 

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் மூன்று பிள்ளைகளின் தாயான விமலன் சிந்து என்கின்ற 42 வயதுடைய குடும்பப் பெண் ஆவார்.

இது தொடர்பான தீவிர விசாரணைகளை பருத்தித்துறைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Post

பிரபலமான செய்தி