திருகோணமலை எண்ணெய்த் தாங்கிகள் இந்திய நிறுவனத்திற்கு வழங்கப்படும்!

user 20-Jan-2025 இலங்கை 194 Views

திருகோணமலை எண்ணெய்த் தாங்கிகள் இந்திய நிறுவனத்திற்கு வழங்கப்படும் என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

களுத்துறையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய போது அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

திருகோணமலையில் காணப்படும் 99 எண்ணெய் தாங்கிகள் நாட்டில் எரிபொருள் விநியோகம் செய்யத் தேவையில்லை என அவர் சுட்டிக்காட்டிள்ளார்.கொலன்னாவ, முத்துராஜவெல எண்ணெய் தாங்கிகள் காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனால் திருகோணமலையில் அதிகளவில் எண்ணெய்த் தாங்கிகள் உள்நாட்டு விநியோக நடவடிக்கைகளுக்கு அவசியமில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, திருகோணமலையில் மேலதிகமாக காணப்படும் சுமார் 61 எண்ணெய் தாங்கிகளைப் பயன்படுத்தி எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமொன்றை நிர்மானிப்பது குறித்து, இந்திய நிறுவனம் மற்றும் பெற்றோலிய வளக் கூட்டுத்தாபனம் என்பன பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். 

 

Related Post

பிரபலமான செய்தி