தையிட்டி தொடர்பில் தென்னிலங்கை ஊடகங்களில் சிங்களத்தில் விளம்பரம்!

user 02-Jan-2026 இலங்கை 32 Views

யாழ்ப்பாணம் தையிட்டி திஸ்ஸ ரஜமகா விகாரை தொடர்பாக தென்னிலங்கையில் தவறான தகவல்கள் பரப்ப படுவதனால், சிங்கள மக்களுக்கு உண்மை நிலையை வெளிப்படுத்த சிங்கள மொழியில் தென்னிலங்கை ஊடகங்களில் விளம்பரங்களை பிரசுரிக்க வலிகாமம் வடக்கு பிரதேச சபை தீர்மானித்துள்ளது.

வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் விசேட அமர்வு தவிசாளர் சோமசுந்தரம் சுகிர்தன் தலைமையில் நடைபெற்ற போதே குறித்த விடயம் முன்வைக்கப்பட்டது.

இதனையடுத்து தையிட்டி விகாரை காணி வரைபடங்களை சிங்கள ஊடகங்களில் தெளிவாக பிரசுரித்து விளம்பரங்களை போட சபையில் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது.

Related Post

பிரபலமான செய்தி