ஜனாதிபதி பொது மன்னிப்பை தவறாக பயன்படுத்திய நபருக்கு வழங்கப்பட்ட தண்டனை

user 25-Jul-2025 இலங்கை 81 Views

ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் சட்டவிரோதமாக அனுராதபுரம் சிறைச்சாலையிலிருந்து விடுவிக்கப்பட்ட டபிள்யூ.எம். அதுல திலகரத்னவுக்கு அனுராதபுரம் மேல் நீதிமன்ற நீதிபதி 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

இது போலி ஆவணத்தைத் தயாரித்து வங்கியிடமிருந்து ரூ. 3.5 மில்லியனை குற்றவியல் ரீதியாக முறைகேடாகப் பயன்படுத்தியமை தொடர்பில் குறித்த நபர் கைது செய்யப்பட்டிருந்தார்.

வங்கியில் இருந்து பணம் எடுக்கப்  ஆவணத்தை போலியாகத் தயாரித்து பணம் பெற்ற குற்றச்சாட்டில் ஐந்து ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனையும், பொது மன்னிப்பு முறைகேடு குற்றச்சாட்டில் மேலும் இரண்டு ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது.

மேலும், இந்த வழக்கின் வாதிக்கு 400,000 ரூபா பண இழப்பீடு வழங்குமாறும், இழப்பீட்டை செலுத்தத் தவறினால் மேலும் பத்து மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்குமாறும் மேல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Related Post

பிரபலமான செய்தி